August 3, 2021

ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகம் வந்தடைந்த, கிருஷ்ணா நிதி நீரை பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி வரவேற்றனர்…

1 min read

தமிழக-ஆந்திர மாநிலங்களுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும். எந்த வகையில் தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், இரு முறை கடிதம் எழுதிய நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 14-ஆம் தேதி விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்று தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ஆந்திராவில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை முழுமையாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை குடிநீர் ஏரிகளான சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகளில் 6.6 டிஎம்சி தண்ணீர் இருப்பும், இந்த பருவத்திற்கான 0.5 டிஎம்சி தண்ணீரும் கிடைப்பதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே.கோவிந்தராஜன் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed