August 3, 2021

ராஜபாளையம் பகுதியில், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கும் “முகாம் அறையை” தங்கப்பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்…

1 min read

இராஜபாளையம் பகுதி பொதுமக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் போக்க இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் புதியதாக பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் அறையை (வார் ரூம்) தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்றார்.

மேலும், அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை போக்க தனி அறையும், தனி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவும் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களை அந்தந்த பிரிவு அல்லது துறைக்கு அனுப்பி 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில், நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டி திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மற்றும் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed