July 28, 2021

பூண்டி கிழக்கு ஒன்றியத்தில், கொரோனா நிவாரண நிதி மற்றும், நிவாரண பொருட்கள் வழங்குவதை, டி.ஜே. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்…

1 min read

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்த ஏழை,எளிய மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக அரசு கொரோனா சிறப்பு நிதியாக ரூ, 2000 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம் மாமன்டூர்,மெய்யூர், தேவந்தவாக்கம், கச்சூர், ஆகிய 8 ஊராட்சிகளில் உள்ள நியாய விலை கடைகளில் 3,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் எம்.எல்.ஏ மக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமை வகித்தார்.

இது தவிர, பேரிட்டி வாக்கம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உட்பட 190 பேருக்கு 5 கிலோ அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நிவர்ணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிகளில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, பூண்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மோதி, மாவட்ட கவுன்சிலர் சுதாகர், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார், அனந்ததேரி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாயகி, மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்ரவர்த்தி, கச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சுவாமி சன்சய்யா, மாமண்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஸ்ரீராம், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அப்துல் ரஷித் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *