August 3, 2021

அச்சன்புதூர் அருகே, கோவிலில் இருந்து ரூபாய் 35,000 மதிப்பிலான குத்து விளக்குகளை திருடிய 2 பேர் கைது…

1 min read

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காசிதர்மம் பகுதியில் உள்ள கோவிலில் மர்ம நபர்கள் குத்து விளக்கை திருடிச் சென்றதாக கோவில் மேலாளர் சுப்பிரமணியன் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில், காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் மீண்டும் காசிதர்மம் பகுதியில் உள்ள வேறு ஒரு கோவிலில் குத்து விளக்குகள் திருடு போனதாக அந்த கோவில் மேலாளர் முப்புடாதி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக விரைந்த சார்பு ஆய்வாளர் சஞ்சய்காந்தி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டார்.

அந்த இரண்டு கோவில்களில் இருந்தும் குத்து விளக்குகளை திருடிய காசிதர்மத்தை சேர்ந்த கார்த்திக்குமார்(21) மற்றும் ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த மாரிமுத்து @ பாபாஜி (55) ஆகிய இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தென்காசி யானை பாலத்தில் திருடியது என்பதும் தெரியவந்தது. பின்பு அவர்களிடம் இருந்து திருடப்பட்ட குத்து விளக்குகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed