August 6, 2021

செங்குன்றம் பகுதியில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த, நரிக்குறவர் இன மக்களுக்கு, கே ஆர் வி குழுமம் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டி தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதனால் தமிழக மக்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரக்கூடிய நிலையில், ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அதேபோல், செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியிலுள்ள நரிக்குறவர் இன மக்கள் கொரோன தொற்று பரவல் காரணத்தால், தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில் அவர்களுக்கு, உதவ வேண்டி கே.ஆர்.வி கல்வி குழுமம் சார்பில், 80  நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு கே.ஆர்.வி.கல்வி குழுமத்தின் நிறுவனர் கே.ஆர்.வெங்கடேசன் அவர்களுக்கு நிவாரண உதவிகளை அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பொருட்களாக வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில், 
சமூக ஆர்வலர்கள் கார்த்திக் கோடீஸ்வரன், நரேஷ் குமார், சாந்தகுமார், பிரேம்குமார், சூரா சங்கர், காசிராஜன் ராகுல், சூர்யா, நந்தா, மதன், ராஜா, தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed