August 6, 2021

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில், பி.ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள், எடியூரப்பாவின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தி ஆர்ப்பாட்டம்…

1 min read

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், விவசாய சங்கத்தினர் சார்பிலும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது எனவும், அந்த அணை கட்டினால் தமிழகத்தில் வறட்சி ஏற்படும் எனவும், அதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதிப்பு உருவாக வாய்ப்புள்ளது. எனவும், சமீபத்தில் பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என, கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அறிவித்ததை எதிர்த்து, திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று ஆனவ போக்கில் அறிவித்துள்ள, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உருவபொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ராவணன் ஒன்றிய தலைவர் எஸ்.வி.கே.வீரசேகர் துணைத்தலைவர் ரத்தினசாமி பாலசுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் உரையாற்றிய, பி.ஆர் பாண்டியன் அவர்கள் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதை தடுக்க கோரியும், அணையை கட்டினால் தமிழகத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்படும் விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் எனவும், விளக்கமாக பிரதமரிடம் எடுத்துக்கூறி உள்ளார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உடனடியாக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என ஆனவபோக்கில் அறிவித்திருக்கிறார். அவருடைய இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு மட்டுமில்லாமல், பிரதமர் – தமிழக முதல்வருடைய சந்திப்பை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மக்களிடையே விரோதப் போக்கை உருவாக்கும் அளவில் எடியூரப்பா பேசி வருகிறார்.

அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும். கூடிய விரைவில் தமிழக காவரி விவசாயிகள் சங்கம் சார்பிலும் எடியூரப்பா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம், என அறிவித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed