August 3, 2021

ராஜபாளையம் பகுதியில், நான்கு இடங்களில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரை வழங்கினார்…

1 min read

இராஜபாளையம் தொகுதியில் வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கும் இராஜபாளையம் நகர் சவகர் மைதானம் டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள உரிமையாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் இராஜபாளையம் நகர் வார்டு 25 சங்கரபாண்டியபுரம் நடராஜா நடுநிலைப்பள்ளியிலும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நான்கு இடங்களில் நடைபெற்றது.

இம்முகாமை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ கொரோனா வைரஸை எதிர்க்க நமக்கு உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே, இந்தியாவிலேயே இத்தடுப்பூசியை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் போர்கால நடவடிக்கை எடுத்துவருகிறார்.

ஆகவே தான் தமிழகத்திற்கு தடுப்பூசி அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது எனவும், இத்தடுப்பூசி மூலம் தமிழக பொதுமக்களை முதல்வர் அவர்கள் காப்பாற்றி வருகிறார்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர் இக்சாஸ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ண ராஜா, ஞானவேல்ராஜா ஒன்றிய கவுன்சிலர் ஏசம்மாள், அரிராம்சேட் அனுசியா, கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு, கிளை கழக செயலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதிஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed