August 6, 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியில் ஏழை எளியோருக்கு கொரோனா நிவாரண பொருட்களை துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ வழங்கினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியில் இளம் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருவள்ளூர் மாவட்டத்தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் மீஞ்சூர் வட்டாரத் தலைவர் ஜலந்தர் முன்னிலையில்
கொண்டக்கரை, மீஞ்சூர், பொன்னேரி, கம்மவார் பாளையம், பழவேற்காடு, ஆரணி ஆகிய பகுதிகளில் ஏழை எளியோருக்கு, அரிசி, மளிகை சாமான்கள், உணவுப் பொட்டலங்கள், முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், பாய்,பெட்சிட் உள்ளிட்ட பொருட்கள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

கொண்டகரை ஊராட்சியில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி,10 கிலோ காய்கறிகள், ஒரு டிரே முட்டைகள் வழங்கப்பட்டது, இதே போன்று கம்மவார் பாளையத்தில் மீஞ்சூர் வட்டாரத் தலைவர் சந்திரசேகர் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு நலத் திட்டங்களை பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை‌.சந்திரசேகர் நேரில் சென்று வழங்கினார்.

அப்போது பா.ஜ.க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகி சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed