July 28, 2021

ஆரணி அடுத்த அய்யம்பாளையத்தில், குடும்ப தகராறு காரணமாக, தாய் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி, குழந்தைகள் இரண்டும் இறந்த நிலையில், தாய் மட்டும் உயிருடன் மீட்க்கப்பட்டார்…

1 min read

ஆரணி அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர், விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி புஸ்பலதா இவர்களுக்கு சர்வேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் ,சஞ்சனா என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், மாமியார் மருமகள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்றும் இருவருக்கும் இடையே சண்டை எற்பட்டு உள்ளது, அதனால் மனதளவில் விரத்தி அடைந்த, மருமகள் புஷ்பலதா தன் இரண்டு குழந்தைகளுடன், தனது விளை நிலத்திலுள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு குதித்துள்ளார்.

அங்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு, சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்த போது, குழந்தைகளுடன் ஒரு பெண் கிணற்றில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து மூவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அப்போது இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருப்பது தெரியவந்தது. அதில், தாய் புஷ்பலதாவை மட்டும் உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து புஷ்பலதாவிடம், கண்ணமங்களம் காவல் நிலைய போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *