July 28, 2021

புழல் ஒன்றியம் புதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது…

1 min read

புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில், புள்ளிலையன் ஊராட்சி  புதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புள்ளிலையன் ஊராட்சி புதுநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில், ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தீனால்பாஸ்கர் கலந்து கொண்டு கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள 50 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அரிசி, முகக்கவசம் மற்றும் சானிட்டைசர் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதேபோல், பாடியநல்லூர், வடகரை, பாளவாயல், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி எளிய முறையில் ராகுல்காந்தி பிறந்த நாளை கொண்டாடினர். இதில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கருணாகரன், ஜெயக்குமார், ராஜேஷ், சிஎஸ்ஐ சர்ச் ஊழியர் சுந்தர்ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர். 

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *