August 6, 2021

தாழையூத்தில், தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைத்து, பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது…

1 min read

தாழையூத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கர் நகர் பகுதியில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு 22 ம் தேதி அன்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் ஆலையில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறோம் என்றும், அதே போல் பல இடங்களிலும் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து இருக்கிறோம் என்றும் கூறி, மிரட்டியுள்ளனர். மேலும், வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தை சொல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு நீங்கள், பணம் தர பணம் தரவேண்டும், என்று மிரட்டி உள்ளனர். இதுகுறித்து, நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் தட்சணாமூர்த்தி அவர்கள் தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேற்படி, வெடிகுண்டுகள் இருப்பதை அறிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது சில இடங்களில் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. உடனே துரிதமாக செயல்பட்ட போலிசார் வெடிமருந்துகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியதுடன், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களைத் தேர்வு செய்து அங்கே வைத்து அவைகளை வெடிக்க செய்தனர்.

மேலும், விசாரணை மேற்கொண்ட போலிசார் மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், நிறுவனத்திற்கு வெடிகுண்டுகளை வைத்தது, அதே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த மேலதாழையூத்து பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (29) மற்றும் தனியாக எலக்ட்ரிக் மெக்கானிக்காக பணிபுரியும் பேட்டை பகுதியைச் சேர்ந்த சலீம் (25),ஆகிய இருவரும் தான் என்பது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed