August 6, 2021

பழவேற்காட்டில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம், போலீசார் தீவிர விசாரணை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பக்கிங்ஹாம் கால்வாயில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் குறித்து
திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு ஏரிபகுதியில் அமைந்துள்ள கரிமணல் அருகே, பக்கிங்காம் கால்வாயில் சுமார் 55 வயதுடைய அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிரேதம் பக்கிங்காம் கால்வாயில் கை கால்களை, மீன் வலையில் உள்ள கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த, திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகிறார்கள். கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் இருப்பதால் இது கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed