July 28, 2021

ராஜபாளையத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத மண்டபம், ஜவுளி கடைக்கு அபராதம்…

1 min read

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதில், சில தளர்வுகள் அறிவித்திருந்த நிலையில் மண்டபம், ஜவுளிக்கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் திருமண மண்டபம், ஜவுளிக்கடைகள் திறந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ராஜபாளையம் வட்டாட்சியர் இராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிஸ்மி கட்பீஸ், கண்மார்க் பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகளும், ஆனந்தா திருமண மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வட்டாட்சியர் ராமச்சந்திரன் அரசு உத்தரவை கடைபிடிக்காத மேற்படி கடைகள் மற்றும் மண்டபங்களுக்கு தலா ரூ.5000 வீதம் 2 ஜவுளிக்கடை, 1 பாத்திரக்கடை, 5 மண்டபங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *