August 6, 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் இந்து முன்னணி சார்பில், அண்ணாமலையார் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகள் திறந்து போல், தமிழக அரசு வழிபாட்டு கோவில்களையும் திறக்க வேண்டும். என, கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ். திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செந்தில், பொதுச்செயலாளர் சிவா, கணபதி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed