August 3, 2021

பத்திரிகையாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த, திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார்…

1 min read

நவீன நெற்றிக்கண் செய்தியாளர் தோழர் சம்பத்குமார் அவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, திருநாவலூர் திமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி முருகன் என்பவர் பற்றி செய்தி வெளியிட்டதற்கு அவரின் தூண்டுதலின் பேரில், செய்தியாளர் சம்பத்குமார் அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு சிலர் ஆபாச வார்த்தைகளைப் பேசி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து, இன்று மாலை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்.பி மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில், மாநில துணை பொது செயலாளர் ஆர்.கே.முருகன், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் முஜிபூர் ரஹ்மான், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் முத்து பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,
இணை செயலாளர் பிரபாகரன்,
கண்டமங்கலம் வட்ட தலைவர் நாராயணன், செயலாளர் சுகுமார், உறுப்பினர்கள் விநாயகம், பாலு, சுரேஷ், பத்மநாபன், வேலு, பச்சையப்பன் உள்ளிட்ட பலர் சந்திக்க வந்திருந்தனர்.

நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed