August 6, 2021

“பெரியபாளையம் பகுதியில், இரவு நேரங்களில் கால்வாய் கரை உடைத்து, மணல் கொள்ளை திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்” என, அரசு அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் இருந்து சின்னம்பேடு பெரிய ஏரிக்குச் செல்லும் கால்வாய் உள்ளது. இக் கால்வாய் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள நீண்ட கால்வாய் ஆகும். மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பெரியபாளையம் பகுதியில் இருந்து தண்ணீரை திருப்பி இக்கால்வாய் வழியாக சின்னம்பேடு பெரிய ஏரிக்கு திருப்பி விடப்படும். இந்த நிலையில், ராள்ளாபாடி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில், இருபுறமும் கரைகளை பல லட்ச ரூபாய் செலவில் பலப்படுத்தி சுற்றி வெள்ளை கற்களை பதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மணல் திருட்டு கும்பல் பலப்படுத்திய கரைகளை உடைத்து மணல் திருடுவதால், கரைமீது விரிசல் காணப்பட்டு மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும், கால்நடைகள் அவ்வழியாகச் சென்றாள் மண் சரிந்து விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனை தடுக்க வேண்டிய, வருவாய்த் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்டு கொள்வதில்லை, என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தொடர்ந்து இரவு நேரங்களில் இந்த மணல் திருட்டு அதிகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பலமுறை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே தற்போது பருவ மழை காலம் வர இருப்பதனால், பெரியபாளையம் போலீசார் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் இந்த திருட்டை ஒழித்து கரையை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என, பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed