August 6, 2021

அறந்தாங்கியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதில், பொதுமக்கள் ஆர்வமுடன் திரளாக பங்கேற்றனர்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பொது சுகாதரதுறை, ரோட்டரி சங்கம், ஜேசிஐ(JCI) மற்றும் செலக்சன்பள்ளி இணைந்து நடத்திய கரோனா தடூப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அறந்தாங்கி எல்.என்புரம் பகுதியில் உள்ள செலக்சன்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அறந்தாங்கி ரோட்டரிசங்கம், ஜேசிஐதமிழன் மற்றும் செலக்சன்பள்ளி இணைந்து பொது மக்களுக்கான தடூப்பூசி முகாமை அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி நகராட்சி (பொறுப்பு) ஆணையர் அய்யனார், வட்டாட்சியர் மார்ட்டின் லூதர்கிங் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமில், நகரின் பல்வேறு பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வட்டாரமருத்துவ அலுவலர் மருத்துவர் இத்திரிஸ், மருத்துவர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் சேகர், செலக்சன் பள்ளி தாளாளரும் முன்னாள் ரோட்டரி தலைவருமான
சுரேஷ்குமார், ரோட்டரி சங்கதலைவர் ராமன்பரத்வாஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வீரமாகாளியப்பன், கிருஷ்னசாமி,
விஜயாதுரைராஜ், வீரய்யன், ஜேசிஐ நிர்வாகி தனசேகரன், நகர சுகாதார ஆய்வாளர் சேகர், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் வீராச்சாமி, கராத்தே யோகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed