August 6, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தேரடி வீதி மற்றும் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதை கான்கீரீட் சாலையாக அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற நகர வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்துதல், நூலகம் அமைத்தல், நகரின் மையப்பகுதில் தீயணைப்பு நிலையம், பழைய மருத்துவ மனையை சிரமைத்தல், உடற்பயிற்சி கூடம், குளிர்சாதன கிடங்கு அமைத்தல் குறித்து நகர வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற பொது தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளான அண்ணாமலையார் கோயில் தேரடி வீதி மற்றும் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை முழுவதும் கான்கீரீட் சாலையாக அமைக்கப்படும், ஒத்தவடை தெற்கு, வடக்கு தெருக்கள் மற்றும் கோயில் சுற்றியுள்ள 4 தெருக்களும் கான்கீரீட் சாலையாக விரைவில் அமைக்கப்படும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்,

திருக்கோயிலுக்கு வரும் வயதான பக்தர்களை பிரகாரம் வரை அழைத்து செல்ல தற்போது ஒரு பேட்டரி கார் மட்டுமே உள்ளதை 4 பேட்டரி கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை விடும் நிலையில் உள்ளதாகவும் கூறினார். திருவண்ணாமலை நகரம் மற்றும் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சிகள் குறித்து தமிழக முதலைமைச்சரிடம் எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, அம்பேத்குமார், ஜோதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed