August 6, 2021

பொன்னேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

மக்களின் அன்றாட தேவையாகவும் அடிப்படை தேவையாகவும் இருந்து வரக்கூடிய பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து கொண்டே போய், அதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருளுடைய விலைகளும் மாள,மளவென ஏறி கொண்டே உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுபடுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அம்பேத்கர் சிலை அருகில் சி.பி.எம் கட்சியின் பொன்னேரி பகுதி நிர்வாகி தவமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நெடுஞ்செழியன், அமரகவி, அபுபக்கர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், ஜீவா, சிறுவாக்கம் சேகர், மதன், ஆகியோர் உட்பட விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed