August 3, 2021

திருவண்ணாமலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சார்பில், அறிவொளி பூங்கா அருகே கண்டன இயக்கமும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும் மற்றும் மாநில உரிமைகளை பறிப்பது கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் எம் வீரபத்திரன், எஸ். ராமதாஸ், எம்.பிரகலநாதன், சிபிஐ நிர்வாகிகள் வே.முத்தையன், கு.ஜோதி, இரா.தங்கராஜ், விசிக நிர்வாகிகள் வழக்கறிஞர் மோகன், நியூட்டன், நாகராஜ், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணி செயலாளர் என்
ஏ.கிச்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed