August 6, 2021

முறப்பநாடு பகுதியில், செல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் கைது…

1 min read

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேரந்தவர் சுடலைமுத்து. இவருக்கு மாலை ராஜா (22) என்ற ஒரு மகனும், கவிதா (17) என்ற ஒரு மகளும் உள்ளனர். நேற்று (29.06.2021) கவிதாவின் சகோதரரான மாலைராஜாவிற்கும் கவிதாவிற்கும் செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டு கவிதா செல்போன் தர மறுத்துள்ளார்.

அதில், ஆத்திரமடைந்த மாலைராஜா கவிதாவை அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கவிதா பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, தலைமறைவான கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின் பேரில், முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed