August 6, 2021

செங்குன்றம் அருகே, கிராண்ட்லையன் பகுதியில், “குடிபோதை மறுவாழ்வு மையம்” அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் …

1 min read

செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் கிராண்ட்லையன் ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு நகர் அனெக்ஸ் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசிக்கின்றனர். இந்நிலையில் விஷ்ணு நகர் அனெக்ஸ் குடியிருப்பு  பகுதியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டை காலி செய்துவிட்டு, குடி போதை மறுவாழ்வு நல மையமாக செயல்பட வேண்டி, அதற்காக அந்த வீட்டை தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது.

அதைக் கேள்விப்பட்ட அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குடி போதை மறுவாழ்வு நல மையம் செயல்பட்டால் சிகிச்சை பெற வருபவர்கள் குடி போதையில் தன்னிலை மறந்து அரை நிர்வானமாக அசுத்தம் செய்வதும், தேவையில்லாமல் இரவு நேரங்களில் சத்தம் போடுவது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனுபவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும், எனவே உடனடியாக குடி போதை மறுவாழ்வு நல மையம் அமைப்பதை,  உரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, இப்பகுதியில் மது குடிப்பவர்கள் மறுவாழ்வு மையம் அமைய உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என,  அதிகாரிகளுக்கு கோரிக்கை  வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் குடியிருப்பு வாசிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed