August 3, 2021

சேலம் அருகே, வழித்தட பிரச்சினையில், நான்கு மணி நேரம் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்…

1 min read

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மலங்காடு கிராமத்தில் சேர்ந்தவர் அய்யனாரப்பன்(70), இவருக்கும் இவரது சகோதர்களான ஐயம்பெருமாள், நாச்சிகவுண்டர் இடையே ஐந்து ஆண்டுகளாக 12 அடி உள்ள வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வழித்தடத்தை சகோதரர்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அய்யனாரப்பனுக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந் நிலையில், இன்று அய்யனாரப்பன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அப்போது அவரது உடலை நெய்க்காரப்பட்டி உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது, சகோதரர்கள் வழித்தடத்தை பயன்படுத்த கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து வழித்தட பிரச்சினை முடியும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்று கூறி, பிரச்சினைக்குரிய வழித் இடத்திலேயே அய்யனாரப்பனின் உடலை வைத்துவிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed