August 3, 2021

ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஆய்வறிக்கை கிடைத்ததும் இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

1 min read

ஆவடி அருகே திருநின்றவூரில் ஸ்ரீ பாலமுருகா ஆலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலிவடைந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நியமினம் செய்துள்ளனர். அவர்களின் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்படை தன்மையுடன் அந்த பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள்.இந்த முழு தவறுகளுக்கும் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர், இடைத்தரகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர் என கூறியவர், இந்த பணி நியமன விவாகரம் தொடர்பாக ஆவினில் உள்ள 25 யூனியன்களுக்கும் ஆய்வறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றதும் முதல்வரின் ஆலோசனை படி, இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed