August 3, 2021

கவரைபேட்டை, டி.ஜே.எஸ் பள்ளி மாணவன் யுவன் தொடர்ந்து உலக சாதனை, குவிந்து வரும் பாராட்டுகள்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்தவர் ரங்கபாஷ்யம் பத்திரிகையாளரான இவரது மகன் ஆர்.ஜி யுவன் (10) கவரைப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் டி. ஜே. எஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் படிப்புடன் சேர்ந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீ சங்கரி யோகாசனப் பயிற்ச்சி பள்ளியில், யோகாசனப் பயிற்சியும் பெற்று வருகிறார்.

இந் நிலையில், சமீபத்தில் இணையதளம் மூலம் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்து கொண்டு, ஒரு நிமிடத்தில் 26 முறை, “நிரலம்ப பூரண சக்கராசனம்” செய்து, ஏற்கனவே மாணவி ஒருவர் ஒரு நிமிடத்தில் 21 முறை செய்த சாதனையை முறியடித்து, தற்போது மாணவன் யுவன் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

மாணவன் யுவனின் இந்த சாதனை,
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், மற்றும் ஆவ்சம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. மாணவனை கௌரவிக்கும் விதமாக பள்ளி சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட பள்ளி நிர்வாகியும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் அவர்களும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் யுவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதே போல், மாணவன் யுவன், மூன்றாம் வகுப்பு படிக்கும் போது , அசிஸ்ட் உலக சாதனை நிகழ்வில் பங்கெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். அதில், 138 கத்திகள் மீது நின்றபடியும் அமர்ந்தபடியும், படுத்தும் ஐம்பது நிலைகளில் யோகாசனங்களை செய்து காட்டி உலக சாதனை படைத்தார்.

யுவன், தனது எட்டாவது வயதில் மூன்றாவது படிக்கும் போது துவங்கிய இந்த உலக சாதனை பட்டியல் தற்போது நீண்டு கொண்டே போகிறது. அவருடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவருடைய பள்ளி நிர்வாகத்திற்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், இவரால் பெருமை சேர்த்துள்ளது. மேலும், மாணவன் யுவன் இதே போல், பல உலக சாதனைகள் படைக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மாணவனை பாராட்டியும், வாழ்த்தியும் மகிழ்கின்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed