August 6, 2021

சங்கரன் கோவிலில் காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்திற்கு மருத்துவ முகாம் நடைபெற்றது…

1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தின் நலன் கருதி மருத்துவ முகாம் சங்கரன்கோவிலில் ஜெயசாந்தி மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல் ஆய்வாளர் ராஜா அவர்கள், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு பணியின்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பணி முடிந்து வீடு திரும்பும்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed