July 28, 2021

சோழவரம் ஒன்றியம் விச்சூர் ஊராட்சியில், இலவச பொது மருத்துவ முகாம்…

1 min read

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விச்சூர் ஊராட்சி வேலவன் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆப் சென்னை ஸ்கைலைன் சார்பில், இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் விச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சங்கர் தலைமையில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆளூநர் லயன் எஸ்.வி.மாணிக்கம், முன்னாள் ஆளூநர் லயன் எல்.கே.எஸ். சையத் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கண் மற்றும் பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.

பின்னர் சமுதாய கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து முகாமில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கண் பரிசோதனை மற்றும் இருதய நோய், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவ பரிசோதனைகளை செய்து பின்னர் அதற்கான சிகிச்சை செய்யப்பட்டு கண் கண்ணாடி, மருந்து மாத்திரைகளை வழங்கி உடல் ஆகியம் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகளை கூறினர்.

இதில் ஸ்கைலைன் தலைவர் முகமதுசதான், செயலாளர் முகமதுஜீனாய்டு, பொருலாளர் ஆயுப்பக்ஷி, கிராம தலைவர் இந்தரபகதூர், வார்டு உறுப்பினர்கள் ஜெனிபர்ராஜன், சுகந்திராஜ், டில்லிகிருஷ்ணன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அறுசுவை உணவு, குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது.

செய்திகள் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *