August 6, 2021

திருவண்ணாமலையில், ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

1 min read

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் பேகோபுரம் 4-வது தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அத்தியாவசிய தேவைக்கு குடிநீர் கிடைக்காமல் தவித்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெருவில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுப்புகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காலி குடங்களுடன் குடிநீர் வழங்கக் கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .

அப்போது, உடனடியாக குடிநீர் சப்ளை செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி விரைவில் குடிநீர் சப்ளை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 1மணி நேரம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed