July 28, 2021

ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவன தலைவரின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி முகாமை, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்…

1 min read

இராஜபாளையம் தொகுதியில், ராம்கோ தொழில் நிறுவனங்களின் முன்னாள் சேர்மன் குருபக்தமணி பி.ஆர்.இராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் 86 வது பிறந்த நாளான இன்று(04-07-2021) அவர்களின் நினைவிடத்தில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், இராஜபாளையம் வியாபார சங்க அலுவலகம் மலையடிப்பட்டி படையாச்சி கல்யாணமண்டபம் முகில்வண்ணம் தெரு சைவ வேளாளர் சாவடி ஆசிரியர் காலணி சேத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார் .

உடன் நகர பொறுப்பாளர்கள் இராமமூர்த்தி மணிகண்டராஜா நகர மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பா.சுமதி ராமமூர்த்தி மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் இக்சாஸ் பி.ஆர்.சி.கணோசன் நகர அமைப்பாளர்கள் செந்தில்குமார் மாயாவி முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *