July 28, 2021

செங்குன்றத்தில், அகில இந்திய நம் நாடு மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்…

1 min read

செங்குன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அகில இந்திய நம் நாடு மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு மாநில தலைவர் எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம். முபாரக் அலி வரவேற்புரையாற்றினார். தேசிய தலைவர் முன்னா பாஷா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் கொரானா இரண்டாவது அலை பரவலை சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் இ.ஏ.ஏ , என்.ஆர். சி , மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் தனியார் பள்ளி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற நான்கு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் முன்னதாக செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் பொதுமக்கள் என 100பேருக்கு கபசூர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவைகள் வழங்கப்பட்டது.
இதில், அக்கட்சியின் மாநில துணை தலைவர்கள்  பி.ஜானகிராமன் ஆர்.ஜெயபிரகாஷ் மாநில செயலாளர் பி.சுகன்லால் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன் மாவட்ட துணை செயலாளர் பி.விக்கி ,ஆர்.பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர்  பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *