July 28, 2021

திருவண்ணாமலை, “தாலுகா அலுவலக வளாகத்தை, பொதுமக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில், உடனடியாக சீர் செய்ய வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…

1 min read

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகம், வெகு நாட்களாகவே சரியான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக கிடந்தன. அதனால் சமீபத்தில் பெய்த சிறிய மழைக்கே தாலுகா அலுவலக வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால், நடந்து வரக்கூடிய பொதுமக்களும், இரண்டு சக்கரங்களில் வரக்கூடிய மக்களும், அதில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.

அந்த இடத்தை கடந்து வரக்கூடிய, அரசு அதிகாரிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமத்துடன் அவ்வழியே சென்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *