July 28, 2021

புள்ளிலையன் ஊராட்சியில், தீவிர தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளிலையன் ஊராட்சியில் பெருந்தொற்று காலத்தினை கருத்தில் கொண்டு, ஊராட்சி வாழ் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி, ஊராட்சி முழுவதும் குப்பைகள் வெற்றி தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, மாவட்ட ஆட்சியர்  உத்தரவுப்படி “தூய்மை திருவள்ளூர் இயக்கத்தில்” கடந்த 28.06.2021 முதல், புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில், தூய்மைப் பணிகளாக ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள்  முழுவதும் அகற்றப்பட்டு, கிருமிநாசினி மற்றும் பிளிச்சிங் பவுடரை தெளித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதுமட்டுமில்லாமல், ஊராட்சி மன்ற தலைவர் சுகாதார பணியாளர்களுடன் இணைந்து, ஊராட்சி முழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *