July 28, 2021

ஆட்சி மாறியது, காட்சி மாறுமா? திருவண்ணாமலையில்,
சேறும் சகதியுமாக காணப்படும் தாலுகா அலுவலக வளாகத்தால் பொதுமக்கள் அவதி…

1 min read

திருவண்ணாமலை மையப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் , இ சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் உழவர் சந்தைக்கு இந்த வழியாக தான் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
முக்கியத்துவம் மிக்க இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் வாகனங்களில் செல்லவும், நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலைமை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனை கண்டும் காணாமல் அலுவலர்கள் தங்கள் பணிகளை செய்து செல்கின்றனர். ஆனால், தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் போது மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் சிமெண்ட் தரை தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா…

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *