August 6, 2021

திருவண்ணாமலையில், காயம்பட்ட தாய் குரங்கை காப்பாற்ற, காவலர்களை உதவிக்கு அழைத்த குட்டி குரங்கு…

1 min read

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகமான குரங்குகள் வசித்து வருகின்றன. அவைகள் கூட்டம் கூட்டமாக, இறை தேடி அங்கும், இங்குமாக சாலைகளிலும், மரங்களிலும் தாவி, தாவி ஓடி திரிவது வழக்கம்.

இந்நிலையில், இன்று கிரிவலப்பாதையில் உள்ள, கிராமிய காவல் நிலையம் பகுதியில் உள்ள, ஒரு உயரமான மரத்தில் இருந்து ஒரு தாய் குரங்கு தவறி கீழே விழுந்துள்ளது.

அதனால், படுகாயம் அடைந்த தாய் குரங்கினுடைய ஒரு குட்டி குரங்கு, உடனே அருகிலுள்ள கிராமிய காவல் நிலைய வாசலில் சென்று அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து, அபய குரலில் சத்தமிட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஹேமமாலினி, மற்றும் பெண் காவலர் சாந்தகுமாரி ஆகியோர், குட்டி குரங்கின் பின்னால் சென்று பார்த்தபோது அங்கு அவனுடைய தாய், காயமடைந்த நிலையில் கிடந்தது.

உடனே, காவலர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலம் விலங்குகள் காப்பகத்திற்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு மையத்திலிருந்து வந்தவர்கள் காயமடைந்த குரங்கு மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed