August 3, 2021

கன்னிகைப்பேர் கிராமத்தில், அன்னை தெரேசா சமூக அறக்கட்டளையின் சார்பில், இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது…

1 min read

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை மற்றும் எம்.என். மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில், அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் இளவரசி தலைமை தாங்கினார். செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் ஆர்.பிரின்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முகாம் மேலாளர் கோபிநாத் தலைமையில்10 ம் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று 100 ம் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சையளித்தனர். அதில், 6 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிராஜ், நவீன், வேலாயுதம், மல்லிகா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் இளவரசி பேசுகையில்; கடந்த15.4.201 அன்று இதே போன்று ஏழைகளுக்காக அறக்கட்டளையின் சார்பில் கண் சிகிச்சை முகாம் அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பயனடைந்தனர். மேலும் இப்பகுதி வாசிகள் டாக்டர் இளவரசியிடம் மீண்டும் கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து தங்களுக்கு உதவிடமாறு கேட்டுக்கண்டனர்.

இதனையடுத்து டாக்டர் இளவரசி அப்பகுதி மக்களுக்காக மீண்டும் இரண்டாவது முறையாக கண் சிகிச்சை முகாம் இன்று ஏற்பாடு செய்யபட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இது தவிர அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் இளவரசி பேசுகையில் இது போன்ற உதவிகள் இங்கு மட்டுமல்லாமல் எப்பகுதியில் இருந்து அழைத்தாலும் எங்களின் அறக்கட்டளையின் சார்பில் உதவி செய்வதாக தெரிவித்தார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed