August 6, 2021

திருவண்ணாமலையில், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் தலித் விடுதலை இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கல்குவாரிகள் தோண்டப்பட்டுள்ளது, சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருவண்ணாமலை நகரம் தேனி மலைப் பகுதியில் சுமார் 4 ஏக்கர் 15 சென்ட் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை, அரசால் மீட்கப்பட்டும் இதுவரை, நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. மேலும், தண்டராம்பட்டு வட்டம் கொழுந்தம்பட்டு கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம், மதுரா மயிலாடும்பாறை பகுதியில் 23 சென்ட் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி வட்டம் கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் 98 சென்ட் நிலம், செங்கம் வட்டம் கொட்ட குளம் கிராமத்தில் 63 சென்ட் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இதேபோன்று பஞ்சமி நிலங்களை மீட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, மாவட்ட தலைவர் அமுல் சாமி, மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் புதன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed