August 3, 2021

ஆத்தூரில், இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற கர்ப்பிணி பெண் தடுப்பூசி போட்டதால் மரணமா?

1 min read

சேலம் மாவட்டம், ஆத்தூர்  அம்மம்பாளையம் அருகே உள்ள கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (24). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் சுபலட்சுமி என்பவருக்கும் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து எனது மனைவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி 
இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதியன்று காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் சித்ரா என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து,  எனது மனைவியை  கட்டாயப்படுத்தி கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளார். ஊசி போட்ட 1 மணி நேரத்திலேயே சுபலட்சுமிக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அது ஒன்றும் ஆகாது என செவிலியர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,  நான்கு நாட்களில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எனது மனைவி கடந்த ஜூன் 23ம் தேதியன்று பரிதாபமாக இறந்து விட்டார். நல்ல நிலையில் இருந்த எனது மனைவியின் இறப்புக்கு காரணமான கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்ட செவிலியர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாவை இழந்து உள்ள குழந்தைகளுக்கு  உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இரட்டை பெண்குழந்தைகளை பெற்ற கர்ப்பிணித்தாய் கொரோனா தடுப்பூசி போட்டதால் இறந்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed