August 6, 2021

செங்கம் அருகே, அரசு பேருந்தும், வேனும் மோதி கொண்டதில், 17 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆனந்தவாடி பகுதியில், திருக்கோவிலூரில் இருந்து பெங்களூருக்கு கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆனந்தவாடி பகுதியில் எதிர் திசையில், சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும், வேனும் எதிர்பாராத விதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில், வேனில் இருந்த 17 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த, மேல் செங்கம் காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து, அங்கு வந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும், பலத்த காயமடைந்த ஆறு பேரை செங்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.


அங்கு காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed