August 6, 2021

சோழவந்தான் பகுதிகளில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை, தென்னை வாழை, கொடிகால் சாய்ந்து சேதம், வெங்கடேசன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்…

1 min read

மதுரை மாவட்டம் சோழவந்தான் அதன் சுற்று பகுதி கிராமங்களில் நேற்று மாலையில் திடீறென்று ஏற்பட்ட சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுகனக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள், கொடிக்கால் பயிர்கள், வேரோடு சாய்ந்து சேதமாகியது. மேலும், மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75) இவர் ஊர் அருகே உள்ள ஒரு தென்னை தோப்பில் குடியிருந்து வந்துள்ளார். நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன்  பெய்த கனமழையால் வீடு அருகே இருந்த தென்னை மரம் முறிந்து ராமசாமி மீது  விழந்துள்ளது. அதில், சம்பவ இடத்திலே முதியவர் பலியானார். இச்சம்பவம் குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மரம் விழந்து பலியான ராமசாமி உடலுக்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் அவர்கள் மரியாதை செய்து, பின்னர் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் மருதுபாண்டியன், வெற்றிசெல்வம், பேரூர் நிர்வாகிகள் முனியாண்டி, சரவணன், பாண்டியன், ராஜா, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்பிரமணி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

.

மேலும், மன்னாடிமங்களம், காடுபட்டி புதுப்பட்டி, தாமோதரன்பட்டி, ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதில், புதுப்பட்டி சேர்ந்த இந்துராணி, செல்லையா, தாமோதரன்பட்டி ஜெயக்கொடி, மனோகரன், ஆகியோரது ஓட்டு வீடு மற்றும் தகர வீடுகள் கூரைகள் பெயர்ந்து சேதமாகியது.

அதேபோல் மன்னாடிமங்களம் புதுப்பட்டி தாமோதரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முருகன், பாண்டி, அழகுதாய், சின்னசாமி, ராஜா, கலா, தொத்தன், ராஜேந்திரன், லோகநாதன், ஆகிய விவசாயிகளின் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட வாழைமரங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு முறிந்து விழந்து சேதமாகியது.

மேலும், இப்பகுதியில் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் சாய்ந்துள்ளதால் விவவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்து உள்ளனர். மேலும் புதுப்பட்டியில் உள்ள துவக்க பள்ளியின் மீது நூறு ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று வேரோடு சாய்த்து விழந்ததால் பள்ளி கட்டிடம் உடைந்து சேதமாகியது. சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட பலன்தரும் மாமரங்கங்கள் வேரோடு சாய்ந்து விழந்துள்ளது. மேலும் அக் கிராமபகுதிகளில்
10க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தும், விழுந்தும் போயின அதனால் அப்பகுதியில் மின்சாரங்கள் தடைபட்டது. அதனால், அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கின.

செய்திகள் – சுரேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed