August 6, 2021

செக்காணூரணி அருகே, மோட்டார் சைக்கிளில், ஆடு திருடி வந்த ஒருவர் கைது மற்றொரு தப்பி ஓட்டம்…

1 min read

மதுரை மாவட்டம் செக்காணூரணி சப் இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வடக்கம்பட்டி ரோட்டில் வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அதை போலீசார் மடக்கி நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


போலீசாரிடம் பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மாவிலிபட்டியை சேர்ந்த பிரகாஷ் (19) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆட்டு குட்டியை திருடி, மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து பிரகாசை கைது செய்த போலீசார், ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சாக்கிலிபட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்திகள் – சுரேஷ்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed