August 3, 2021

ராஜபாளையத்தில், ரயில்வே மேம்பால பணியை மீண்டும் துவக்க, அதிகாரிகளுடன் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆலோசனை…

1 min read

இராஜபாளையம் சத்திரப்பட்டி (வெம்பக்கோட்டை) ரயில்வே மேம்பாலப்பணி கொரோனா ஊரடங்காலும் தேர்தலினாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் லிங்கசாமி அவர்கள் வட்டாட்சியர் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் இன்று (09.07.2021) ஆய்வு மேற்கொண்டார்,

இந்நிகழ்வில் பேசிய எம்.எல்.ஏ வருவாய்த் துறை சார்பாக நில உரிமையாளர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு நிலத்தை நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது அதனால் மேம்பாலம் அமைக்கும் பணி வரும் திங்கள் அன்று தொடங்கப்பட்டு நான்கு மாதங்களில் முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

அதற்கு பொறியாளர் அவர்கள் மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி நான்கு மாதங்களில் முடிக்கப்படும் எனக் கூறினார், மேலும் பணி தொடங்கப்பட இருப்பதால் போக்குவரத்தை எவ்வாறு சரி செய்வது குறித்தும் போக்குவரத்து ஆய்வாளர்களுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்வில், உதவி கோட்ட பொறியாளர் முத்தீஸ்வரன், உதவிப் பொறியாளர் பொன்முரளி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன், உதவி ஆய்வாளர் கண்ணன், திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed