July 28, 2021

கும்மிடிப்பூண்டி டயர் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்து, 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 2 வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பழைய டயர்களை தூளாக்கி, ஆயில் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் அதிகபட்ச வெப்பநிலையில் பாய்லர் கொதிக்கும் நிலையில் தொழிலாளர்கள், பாய்லரின் மூடியை திறந்த போது பாய்லர் வெடித்து சிதறிது.

அதில் 2 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து உடனடியாக சிப்காட் காவல் துறையினருக்கு வந்த தகவலையடுத்து, அவர்கள் விசாரணை செய்தனர். அப்போது உயிரிழந்த இருவரும் உ.பி.யை சேர்ந்த ஜிதேந்திரா(35) மற்றும் ம.பி.யை சேர்ந்த குந்தன்(21) என தெரியவந்தது.மேலும் படுகாயமடைந்தவர்கள் ம.பி.யை சேர்ந்த ஜெகதீஷ்(21), விதூர்(18), சாயல்(18) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், உயிரிழந்த 2 தொழிலாளர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *