July 28, 2021

செங்குன்றத்தில், அகில இந்திய நம் நாடு மக்கள் கட்சி சார்பில்,  கொரானாவால் வாழ்வாதாரம் இழந்த  துப்புறவு பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

செங்குன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் அகில இந்திய நம் நாடு மக்கள் கட்சி சார்பில்  கொரானாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள  துப்புறவு பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில தலைவர் ராஜா தலைமையில்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் முன்னாபாஷா, தேசிய பொது செயலாளர் முபாரக்அலி, மாநில பொது செயலாளர் ஜானகிராமன்  ஆகியோர் கலந்து கொண்டு  தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி செங்குன்றம் பேரூராட்சிகளை சேர்ந்த  துப்புறவு பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட  200 க்கும் மேற்பட்டோர்களுக்கு  அரிசி,  காய்கறிகள் புத்தாடைகள் போன்ற நலதிட்ட உதவிகளை  வழங்கினர்.

இதில்  பொறுப்பாளர்கள்  தங்கமணி,  சையத்ஜீலானி, பிரபு, விக்கி,  சந்தியா உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். |

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *