August 6, 2021

பெரியபாளையம் அருகே தனியார் அறக்கட்டளை சார்பில், கட்டப்பட்ட கிராமப்புற மருத்துவமனையை தமிழ்நாடு ஆளுநர் திறந்து வைத்தார்….

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில், கிராமப்புற மருத்துவமனை கட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரிப்பன் அகற்றி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்றைய கால கட்டத்தில் 10ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது பாராட்டத்தக்கது என்றார். மருத்துவர்கள் சேவை அளப்பரியது எனவும், நோயாளிகளின் மீட்பர்கள் என்றும், பிரெஞ்சு தத்துவஞானி வால்டைர் வாசங்கங்களை குறிப்பிட்டு மருத்துவர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்பாடு, தனிமனித இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் ஜெய்ஹிந்த் எனவும், ஜெய் தமிழ்நாடு எனவும் கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமது உரையை முடித்து கொண்டார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

செய்தியாளா – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed