July 28, 2021

சேலத்தில், அருந்ததியர் சமூகத்திற்கான, உள் இட ஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் அருந்ததியர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்…

1 min read

அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 3 சதவிகித உள் ஒதுக்கீட்டில் ஏற்படும் காலி பணியிடங்களை அருந்ததியர் சமூகத்தினருக்கே மீண்டும் வழங்கிட வேண்டும். தாழ்த்தப் பட்டோருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

இதுவரை இட ஒதுக்கீடு போய் சேராத பிற அட்டவணை சாதிகளுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 29.4.2009 தேதிக்கு முன்னர் அரசின் பணிகளில் இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளின் விகிதாச்சாரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையினை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில், சேலம் குகை பெரியார் நினைவு வளைவு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெ.பிரதாபன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் ரஜினி (எ) ராமசாமி, மாநகர செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் முகிலன், தூயவன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் குகை கார்கில் நகர் பகுதியிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாரு குகை பெரியார் நினைவுவரை ஊர்வலமாக வந்தனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

செய்திகள் – தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *