July 28, 2021

பொன்னேரியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி…

1 min read

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணிகள் நடைபெற்றன.

அதேபோல், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக, இன்று காலை 10 மணி அளவில் வேண்பாக்கம் கண்ணைய நாயுடு திருமண மண்டபம் அருகில் இருந்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்தக் கண்டனப் பேரணியும், ஆர்ப்பாட்டமும்,
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், அதில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி டி.எல். சதாசிவலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், டி.எல். சதாசிவலிங்கம் ஆகியோர் மாட்டு வண்டிகளிலும், சைக்கிளிலும், நடந்தும் பேரணியில் வந்தனர், மாவட்ட நிர்வாகிகள் கோவர்த்தனம், யுகாந்தர், பொன்னேரி நகர தலைவர் கார்த்திகேயன் உட்பட
காங்கிரஸ் கட்சியின் வட்டார மற்றும் நகர நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக சைக்கிள்களில் வந்து கலந்து கொண்டனர்.

பேரணி, வேண்பாக்கத்தில் துவங்கி, எல்.என்.ஜி காலேஜ், அம்பேத்கர் சிலை, அண்ணா சிலை வழியாக, ஹரிஹரன் பஜார் மற்றும் தேரடி, புதிய பேருந்து நிலையம், வழியாக வந்து அம்பேத்கர் சிலை அருகே பேரணி நிறைவுற்றது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *