August 3, 2021

மதுரை தெப்பக்குளம் பகுதியில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு, உடனடியாக உதவிகள் செய்த, போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி அவர்களை பொதுமக்கள் பாராட்டினர்…

1 min read

மதுரை மாவட்டம்
மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை பகுதியில் சாலையோரத்தில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு திடீரென்று கீழே விழுந்துள்ளார். அதில், முதியவரின்
தலையில் பலத்த காயம் எற்பட்டு, சுய நினைவின்றி மயக்க நிலையில் கிடந்தார். அவரை, அப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர், தங்கமணி
அவர்கள் அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கீழே கிடந்த முதியவரை காப்பாற்றி, 108, ஆம்புலசிற்க்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவருக்கு முதலுதவி கொடுத்து அவரை சுய நினைவுக்கு வரவைத்தார். அதன் பின் ஆம்புலன்ஸ் வந்த உடன் அதில் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திடீரென அந்த இடத்திற்கு வந்து உடனடியாக முதியவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சை வரவழைத்து யாரும் எதிர்பாராத நிலையில் இவ்வளவு உதவிகளையும் மனிதநேயத்துடன் செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணியை அப்பகுதி மக்கள் மனமகிழ்வுடன் பாராட்டினர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed