August 6, 2021

திருவண்ணாமலை, உலக மக்களுக்கு புண்ணிய தளம் நகராட்சி அதிகாரிகளுக்கு…

1 min read

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசிக்கவும், அந்த மலையை கிரிவலம் வரவும், உலகம் முழுவதும் இருந்து, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் படையெடுத்து வருவது வழக்கம். அந்த அளவிற்கு திருவண்ணாமலை உலக மக்களுக்கு புண்ணியத் தளமாக தெரிகின்றது. ஆனால்… கோயில் நகரமான, திருவண்ணாமலை நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அந்த ஊரின் முக்கியத்துவம் என்னவென்று தெரியவில்லையே என்பது தான், நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மனித கழிவுகள் சாலையில் சென்றதால் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களும், பொதுமக்களும் அந்த வழியாக வருவதற்கு கூட சிரமப்பட கூடிய சூழ்நிலை நிலவியது. அதற்குப் பிறகு, நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து கழிவு நீர் செல்லும் குழாயில் இருந்த அடைப்பை அகற்றினர்.

திருவண்ணாமலை நகரம் காமராஜர் சிலை அருகில் போலீசார் பணியில் ஈடுபடும் பக்கத்திலேயே நான்கு நாட்களாக குப்பை அகற்றாமல் கிடக்கிறது. ஆதலால் துர்நாற்றம் வீசுவதால், போலீசார் தூரம் நின்று பணி செய்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அங்கே இருக்கக்கூடிய குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சியில் இதுபோன்ற பல விதமான சுகாதார சீர்கேட்டிற்கு நகராட்சி அதிகாரிகளே பொறுப்பு என திருவண்ணாமலை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed