July 28, 2021

மீஞ்சூர் அருகே, விவசாயி இடி தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்…

1 min read

மீஞ்சூர் அருகே உள்ள, வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவருடைய மகன் முருகன் (43) இவர் விவசாயம் செய்து வருகிறார். முருகனுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். சில தினங்களாக பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதினால், முருகன் தனது விவசாயத்திற்குப் பயன்படுத்த கூடிய பொருட்கள் மழையில் நனைந்து வீணாகி விடாமல் இருப்பதற்காக, பொன்னேரிக்கு சென்று, பிளாஸ்டிக் தார்ப்பாய் வாங்கி கொண்டு, இன்று இரவு 7 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவர், ஜோதி நகரில் இருந்து திருமுல்லைவாயல் செல்ல கூடிய சாலையில், வேலூரை கடந்து சென்று கொண்டிருந்த போது, தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தனது மோட்டார் சைக்கிளில் முருகன் வேகமாக வீடு சென்று விடலாம் என நினைத்து, மழையில் நனைந்து கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில்,

முருகன் சிறிதும் எதிர்பாராத நிலையில், இடி மின்னல் அதிகமாக இருந்தது. அதில், திடீரென ஏற்பட்ட இடி தாக்கி முருகன் மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரத்தில் அந்த சாலையின் வழியாக சென்றவர்கள் கீழே விழுந்து கிடந்த முருகனை காப்பாற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *