July 28, 2021

எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில், குளம் அமைக்கும் பணியை, ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சி, பாரதி நகரில் சுமார் 4.5 ஏக்கர் அரசு நிலத்தை 30 ஆண்டுகளாக தனிநபர்கள் ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இதனால், திருக்கண்டலம் ஏரியின் உபரி நீர் ஏரி தாங்கல், சித்தேரிஓடை, சித்தேரி, காக்குட்டை, தாமரைக்குளம், மஞ்சங்காரணை, மேட்டுப்பாளையம் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு இத்தண்ணீர் செல்வது தடைபட்டு இருந்தது.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக மதன் என்ற சத்யராஜ் பொறுப்பேற்றவுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி மன்ற நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டது. எனவே, பாரதி நகரில் சுமார் 4.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க டிசம்பர் மாதம் 2020 ம் ஆண்டு தீர்மானம் இயற்றி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

அதனால், தற்போது பாரதி நகரில் 300 மீட்டர் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்தால் உபரிநீர் தடையின்றி கொசஸ்தலை ஆறு வரையில் செல்லும். மேலும், பாரதி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ 7.60 லட்சம் செலவில் 40 மீட்டர் நீளம், அகலமும், 5 அடி ஆழம் இருக்கும் வகையில் குளம் உருவாக்கும் பணியை ஊராட்சி மன்றத்தலைவர் மதன் என்ற சத்யராஜ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *